Facebook

Menu

Wednesday, August 19, 2020

studentsquestionpaper.in

How to make Horlicks at Home - Horlicks வீட்டிலேயே செய்வது எப்படி?

Horlicks வீட்டிலேயே செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்: கோதுமை: 2 cups நிலக்கடலை: 50 gm பாதாம்: 50 gm முந்திரி பருப்பு: 50 gm சீனி / பனங்கற்கண்டு : 200 gm ஏலக்காய்:5 செய்முறை: 1. முதலில் 2 cup கோதுமையை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் பகலும் இரவும் கோதுமையை கிளி கட்டி வைத்து முளைக்க வைக்கவும். அவ்வப்போது தண்ணீர் நனைத்து விடவும். 2. கோதுமை முளைத்த பின்னர் அதை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து பின்னர்அதை வாணலியில் சிவக்க வறுத்து mixiயில் பொடி செய்ய வேண்டும். 3. பின்னர் பருப்பு வகைகளையும் வறுத்து பொடி செய்ய வேண்டும். 4. அதன் பின்னர் ஏலக்காய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து mixiயில் பொடி செய்ய வேண்டும். 5. பின்னர் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக mix செய்ய வேண்டும். 6. சுவையான Horlicks ரெடி.

Homemade Horlicks in Tamil Video Link - Click Here

Read More

Thursday, June 11, 2020

studentsquestionpaper.in

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுன்? தமிழக அரசு இன்று பதில்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுன்? தமிழக அரசு இன்று பதில்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுனை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் தாக்கல் செய்ய உள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு படுமோசமாக உள்ளது.
சென்னையில் 27,398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாள்தோறும் 1,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா மரணங்களும் சென்னையில் தொடருகிறது. 

சென்னையில் மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கோரதாண்டவமாடுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று விசாரித்தனர்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணிடம், கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு லாக்டவுனை முழு அளவில் செயல்படுத்துகிற திட்டம் அரசிடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை இன்று தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு லாக்டவுன் முழு அளவில் செயல்படுத்தப்படுமா? என்பது இன்று தெரியவரும்.
Read More

Saturday, June 6, 2020

studentsquestionpaper.in

Pineapple Kesari in Tamil - தித்திக்கும் பைனாப்பிள் கேசரி

தித்திக்கும் பைனாப்பிள் கேசரி

கேசரியில் நாம் இதுவரை வெறும் ரவையை மட்டும் வைத்து தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அன்னாசிப் பழத்தை வைத்து சற்று வித்தியாசமாக கேசரியை ஈஸியாக செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!




தேவையான பொருட்கள் : அன்னாசி - 1/2 பழம் ரவை - 1 கப் நெய் - 3/4 கப் முந்திரி - 10 கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 2 கப் தண்ணீர் - 2 1/2 கப் பைனாப்பிள் எசென்ஸ் - 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் அன்னாசிப்பழத்தின் தோலை நீக்கி நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் நெய்யில் பாதியை ஊற்றி, முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, அதில் கேசரி பவுடரை சேர்த்து, வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு நன்கு வேகும் வரை கிளறவும். பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து கட்டியில்லாமல் சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பைனாப்பிள் எசென்ஸ், நெய் போன்றவற்றை சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விடவும். இப்போது சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி!!!
Read More