Facebook

Menu

Friday, August 3, 2018

studentsquestionpaper.in

சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக அழைப்பு ஹீலர் பாஸ்கர் உள்பட 2 பேர் கைது

சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக அழைப்பு ஹீலர் பாஸ்கர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளி ஆசிரியை. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிருத்திகாவுக்கு, கடந்த 22-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.


இயற்கை முறையில் பிரசவம் பார்க்க விரும்பிய கார்த்திகேயன், தன்னுடைய நண்பர் பிரவீண், அவருடைய மனைவி லாவண்யா ஆகியோரின் துணையுடன் ‘யூ டியூப்‘ சமூகவலைத்தளத்தை பார்த்து வீட்டில் பிரவசம் பார்த்தனர். அப்போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக கிருத்திகா உயிரிழந்தார். இதையடுத்து கார்த்திகேயன், அவருடைய நண்பர் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சமூகவலைத்தளத்தை பார்த்து பிரசவம் பார்த்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவத் துறையினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் கோவையை அடுத்த கோவைப்புதூரில் தனியார் அமைப்பு சார்பில், வருகிற 26-ந் தேதி கர்ப்பிணிகளின் சுகப்பிரவசத்துக்கு ஒருநாள் இலவச பயிற்சி அளிப்பதாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

அதில் ‘இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்’ மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பயிற்சி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து ஜான்சன் என்பவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து, வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்று கூறி பொது மக்களை ஏமாற்றியதாக கூறி கோவைப்புதூரை சேர்ந்த ஹீலர் பாஸ்கரை (வயது 42) குனியமுத்தூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன்(32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (மோசடி), 511 (குற்றம் செய்ய முயல்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுகப்பிரசவத்துக்கான பயிற்சி தொடர்பாக ஹீலர் பாஸ்கர் கட்டணம் எதுவும் வசூல் செய்யவில்லை.போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஹீலர் பாஸ்கர்,இயற்கை முறையில் பல்வேறு வியாதிகள் குணமாக பல ஆண்டுகளாக ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அவருடைய ஆலோசனைகளை ஆன்லைனில் பார்த்து பலரும் பின்பற்றி வந்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :