புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!
எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.
ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.
எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.
எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..! எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?