Facebook

Menu

Tuesday, March 5, 2019

studentsquestionpaper.in

பேரிச்சம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? யாரும் மிஸ் பண்ணாதீங்க!

பேரிச்சம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? யாரும் மிஸ் பண்ணாதீங்க!


தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். பொதுவாக இது அரேபிய நாடுகளில்தான் அதிகம் விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் உபாதைகளை சரி செய்கின்றன. அதிக நார் சத்து கொண்ட பேரீச்சம்பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல்வேறு நல்ல விஷயங்கள் உள்ளன.

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் சக்தியும் அதிகரிக்கின்றது. மேலும், கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, கண்பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழம் தீர்வாக அமைகிறது.

பேரிச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். மேலும், பேரிச்சம் பழத்தை பெண்கள் கர்பமாக இருக்கும்போது சாப்பிட்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

தினமும் காலை மற்றும் இரவில் பேரிச்சம் பழங்களை, சூடான பசும்பாலுடன் சேர்த்து அருந்தினால் ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :