பிச்சைக்காரரின் பையில் ரூ.3 லட்சம்
Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips, Cinema News and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குஜ்நக்கல் பகுதியில் உள்ள தர்கா முன்பு பஷீர்(வயது 75) என்பவர் பிச்சை எடுத்து வந்தார். தர்காவுக்கு வருபவர்கள் பஷீருக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் உணவுகளையும் கொடுத்து வந்தனர்.
பிச்சை எடுத்த சில்லரை காசுகளை இரவு அங்குள்ள கடைக்காரர்களிடம் கொடுத்து ரூபாய் நோட்டுகளாக வாங்கி வைத்து கொள்வார். இரவு தர்கா முன்பே படுத்து தூங்குவார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை பஷீர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் மாலை வரை அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பஷீரை தட்டி எழுப்பியபோது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பஷீர் வைத்திருந்த பையில் அவரது உறவினர்களின் விவரம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது பையில் ஏராளமான ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 676 இருந்தது.
12 ஆண்டுகளாக தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பஷீர் யாரிடமும் பேசமாட்டார். இதனால் அவரை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை தர்கா நிர்வாகத்தினரே அடக்கம் செய்தனர். பஷீரிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை தர்கா நிர்வாகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.