Facebook

Menu

Saturday, January 11, 2020

studentsquestionpaper.in

தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும்னு தெரியுமா?

தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும்னு தெரியுமா?

தூக்கம். நாள் முழுக்க ஓடி கொண்டிருக்கும் நாம் அடுத்த நாள் உற்சாகமாக செயல்பட தூக்கம் தான் தேவையாக இருக்கிறது. ஓய்வு என்பது வேறு தூக்கம் என்பது வேறு இரண்டையும் குழப்பி கொள்ள கூடாது. லைஃப்ஸ்டைல் எவ்வளவோ மாற்றங்களை கொண்டிருக்கிறது என்றா லும் அன்றாட பழக்கங்களிலும் பல மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது. அவற்றில் முறையான தூக்கத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இவை நாளடைவில் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மனிதன் குழந்தை பருவத்திலிருந்தே தூக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்த வயதில் எவ்வளவு தூக்கம் என்பதை பார்க்கலாம்.
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவ ருக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. இரவு ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் முழுவதும் உற்சாகமாக கழிக்க முடியும். இந்த ஆழ்ந்த உற்சாகம் நமக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதற்கென வேர்ல்டு அஸோஸியேஷன் ஆஃப் ஸ்லீப்பிங் மெடிசன் என்ற அமைப்பு வருடந்தோறும் மார்ச் 16-ல் உலக தூக்க தினத்தை கொண்டாடி வருகிறது.

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வரை தூக்கம் குறித்த விழ்ப்புணர்வு யாரும் இருந்திருக்கவில்லை. அதை வலியுறுத்த வேண்டிய அவசியமும் இருந்ததில்லை. ஆனால் காலங்கள் மாற மாற குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்த தூக்கத்தை உரிய முறையில் கடைபிடிக்கவில்லை என்பதுதான் இந்த தூக்கத்துக்கு கூட விழிப்புணர்வு தரும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தால் தினமும் 10 மணி நேரம் தூங்க வேண்டும். இவர்கள் 8 மணி நேரத்துக்கு குறைவான தூக்கமோ 10 மணி நேரத்துக்கு அதிகமான தூக்கமோ கொண்டால் அடுத்த நாளில் நிச்சயம் சோர்வடைவார்கள். அம்மாக்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சீக்கிரம் சாப்பிட பழகுவதோடு விரைவில் படுக்கைக்கு செல்லவும் பழக்கப்படுத்த வேண்டும்.

இரவு 8 மணிக்காவது குழந்தைகளை தூங்க வைக்க பழகினால் தான் குறைந்தது மறுநாள் காலை 6 மணிக்கு எழுவதோடு அந்நாள் முழுவதும் சோர்வாகாமல் இருப்பார்கள். மந்தமாக இருப்பார்கள் . பிள்ளைகள் படுத்தவுடன் தூங்க வேண்டும் எனில் குழந்தைகளை தூங்கும் போது கம்ப்யூட்டர் முன்போ தொலைக்காட்சி முன்போ நீண்ட நேரம் அமர வைக்காதீர்கள்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தால் தினமும் 10 மணி நேரம் தூங்க வேண்டும். இவர்கள் 8 மணி நேரத்துக்கு குறைவான தூக்கமோ 10 மணி நேரத்துக்கு அதிகமான தூக்கமோ கொண்டால் அடுத்த நாளில் நிச்சயம் சோர்வடைவார்கள். அம்மாக்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சீக்கிரம் சாப்பிட பழகுவதோடு விரைவில் படுக்கைக்கு செல்லவும் பழக்கப்படுத்த வேண்டும்.

இரவு 8 மணிக்காவது குழந்தைகளை தூங்க வைக்க பழகினால் தான் குறைந்தது மறுநாள் காலை 6 மணிக்கு எழுவதோடு அந்நாள் முழுவதும் சோர்வாகாமல் இருப்பார்கள். மந்தமாக இருப்பார் கள். பிள்ளைகள் படுத்தவுடன் தூங்க வேண்டும் எனில் குழந்தைகளை தூங்கும் போது கம்ப்யூட்டர் முன்போ தொலைக்காட்சி முன்போ நீண்ட நேரம் அமர வைக்காதீர்கள்

பதினம் வயதினர் மற்றும் இளைய தலைமுறையினர் இருவருக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வித்தி யாசம் உண்டு. இவர்கள் தினமும் 8 அல்லது 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதிலிருந்து இரண்டு மணி நேரம் கூடவும் கூடாது. இதிலிருந்து 1 மணி நேரம் குறையவும் கூடாது. இதில் இளவயது தலைமுறையினர் 6 மணி நேரத்துக்கு குறையகூடாது என்பதும் கவனிக்கதக்கது.

இது இளைய தலைமுறையினருக்கு மட்டும் அல்ல நடுத்தர வயது வரையில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். வயதானவர்கள் 8 மணி நேரம் வரை உறங்கலாம். அவை 10 மணி நேரம் தாண்டி அதிகரிக்கவும் கூடாது. சிலர் ஐந்து மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் போது உடல் சோர்வு மேலும் அதிகரித்துவிடும். ஆனால் இயல்பாகவே இந்த வயதில் தூக்கம் என்பதே குறையும் போது ஆழ்ந்த தூக்கம் கேள்விக்குரியதாகிறது.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :