Facebook

Menu

Thursday, August 2, 2018

studentsquestionpaper.in

கோலி சதம் விளாசி அசத்தல்

கோலி சதம் விளாசி அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எட்டி சாதித்தார். 


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடக்கிறது. 

இங்கிலாந்து சரித்திரம்: 
இப்போட்டி இங்கிலாந்து அணி சர்வதேச அரங்கில் பங்கேற்கும் 1000வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில், 9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கரன் (24), ஆண்டர்சன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார். ஷமி 2 விக்கெட், உமேஷ் யாதவ், இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

10 பந்தில் வெறும் 2 ரன்கள்...... 
இந்நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெறும் 10 பந்துகளை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி கூடுதலாக 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் கரன் (24) சமி வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

சொதப்பல் துவக்கம்: 
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து வேகத்தில் தடுமாறினர். 20 வயதான ஷாம் கரன் வேகத்தில் முதலில் முரளி விஜய் (20) வெளியேறினார். பின் கரண் வேகத்தில் ராகுல் (4) சொதப்பலாக போல்டானார். தொடர்ந்து தவான் (26) கரனிடம் சரணடைந்தார்.

பின் வந்த ரகானே (15), தினேஷ் கார்த்திக் ‘டக்’ அவுட்டானார். பாண்டியா (22), அஷ்வின் (10), முகமது ஷமி (2), இஷாந்த் சர்மா (5) என அடுத்ததடுத்து வெளியேறிய போதும், மறு முனையில் நங்கூரமாக நின்ற கேப்டன் கோலி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். 

இதன் மூலம் கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சொதப்பியதாக அதிகம் விமர்சிக்கப்பட்ட கோலி, இம்முறை முதல் டெஸ்டிலேயே அதற்கு சரியான பதிலடி கொடுத்து தன்மீதான விமர்சனத்துக்கு பெரிய பூட்டு போட்டுள்ளார். 

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :