அண்ணா சமாதி அருகே முடியாது, காந்தி மண்டம் அருகே இடம் ஒதுக்க தயார் - தமிழக அரசு
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஸ்டாலின் மற்றும் தி.மு.க சார்பில், அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி வேண்டி முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அப்போது “பார்ப்போம்” என்று மட்டும் முதலமைச்சர் பதில் அளித்ததாக துரை முருகன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் தமிழக அரசின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சர்தார் வல்லபாய் படேல் சாலையில், அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம், அருகே இடம் தருவதாக அறிவித்துள்ளது.
SHARE
கடற்கரையில் சமாதி அமைப்பது பற்றி சில வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை காரணம் காட்டி, அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.