கருணாநிதி மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள்
கடந்த சில நாட்களாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) மாலை கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ சீசன் 2-வின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கலைஞரின் மறைவு செய்தியை அறிவிக்கப்பட்டது போல் ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வீடியோக்களில் திரு. மு.கருணாநிதி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் என அனைவரும் தெரிவிக்கின்றனர். மேலும், போட்டியாளர்கள் எழுந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகின்றனர். பின், கருணாநிதி பற்றிய சில நினைவுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.