மிககனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலாா்ட் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் வருகிற 7ம் தேதி வரை தமிழகத்திற்கு ரெட் அலாா்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி ரெட் அலாா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வருகிற 6, 7ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலாா்ட்
விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு வருகிற 7ம் தேதி வரை ரெட் அலாா்ட் விடுத்துள்ளது.
கடலக்கு சென்ற மீனவா்கள் நாளை கரை திரும்ப அறிவுறுத்தல் –ஆய்வு மையம்
வருகிற 7ம் தேதி தமிழகத்தில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7ம் தேதி வானிலை மிகவும் மோசமாக காணப்படும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.