பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும்
மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 130 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 180 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும். புயல் கரையைக்கடக்க்கும் போது வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.