சென்னையில் காலை 11 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யலாம்..!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.
மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 380 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 400 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும். புயல் கரையைக்கடக்க்கும் போது வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை 11 மணிக்கு மேல் மிதமான மழை பெய்யலாம்.