நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி பார்வையிட்டு வருகிறார்.
புயல் காரணமாக நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்து உள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.