சர்க்கரை, கொழுப்பு இல்லாத காய்கறிகள்
today news, health tips, health Fruit, health vegetables, today news, sugar control foods, cholesterol control foods, medical tips, sugarless foods, sugarless fruits, sugarless vegetables.
உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
எனினும் ஒருசில வகை காய்கறி, பழ வகைகளில் சர்க்கரை அளவும், ஸ்டார்ச் அளவும் அதிகம் இருக்கின்றன. அதனால் நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமின்றி தமக்கும் அத்தகைய பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பேர் காய்கறி, பழ வகைகளை சாப்பிட தயங்குகிறார்கள். சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
* தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.
* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது
* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.
* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.
* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.
* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.