Facebook

Menu

Thursday, September 12, 2019

studentsquestionpaper.in

Actor Surya Has Changed Religion - மதம் மாறினாரா நடிகர் சூர்யா?

மதம் மாறினாரா நடிகர் சூர்யா?

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா, இஸ்லாம் மதத்துக்கு மாறினார் என்ற தகவல் சில நாட்களாக வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.


இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் அத்தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில், இஸ்லாமியர்கள் பலர் கூடியிருக்கும் மசூதி வளாகத்துக்குள் சூர்யா காரில் வந்து இறங்குகிறார். அப்போது முஸ்லீம்களின் அடையாளங்களில் ஒன்றான வெள்ளை நிற குல்லாவை அவர் அணிந்திருக்கிறார்.

முஸ்லீம் பிரமுகர்கள் புடைசூழ, மசூதிக்குள் செல்லும் சூர்யாவுக்கு, ஒருவர் தலைப்பாகையை அணிவிக்கிறார். அதைத்தொடர்ந்து சூர்யா அங்கு தொழுகை மேற்கொள்கிறார். வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தின் நம்பகத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறியது தொடர்பாக ஊடகங்களில் இதுவரை வெளியாகியுள்ள செய்திகள், அதற்கு சூர்யா தரப்பினரின் ரியாக்ஷன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டாண்டுகளுக்கு முன்பே, அதாவது 2017 ஆம் ஆண்டே இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், அச்செய்திகள் வதந்தி மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என அப்போதே சூர்யாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. அத்துடன், சூர்யாவின் நெருங்கிய நண்பரான ராஜசேகர் பாண்டியன், 2017 மார்ச் 27 -ஆம் தேதி, டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "குறிப்பிட்ட வீடியோ காட்சிகள், ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு, சூர்யா கடந்த 2013 - ஆம் ஆண்டு சென்றபோது எடுக்கப்பட்டது. அங்கு, சிங்கம் -2 படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாய் அழைப்பு விடுத்ததன் பெயரில் மரியாதை நிமித்தமாக சூர்யா தர்காவுக்கு சென்றார்.

தொழுகை மேற்கொள்ளவே அவர் அங்கு சென்றாரே தவிர, மதம் மாறுவதற்காக செல்லவில்லை" என்று ராஜசேகர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இதுபோன்ற தகவல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறினார் என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்ற, பொய்யான செய்தி என்று, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தெரிய வந்துள்ளது.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :