Facebook

Menu

Tuesday, September 10, 2019

studentsquestionpaper.in

Health Tips - Beer - பீர் குடிப்பவரா நீங்கள்? இதப்படிங்க முதல்ல!

பீர் குடிப்பவரா நீங்கள்? இதப்படிங்க முதல்ல!

மேலை நாட்டு பீர் பிரியர்கள் பொங்கிவரும் நுரை கொண்ட பீரை முகத்தில் அடித்து ஊற்றி விளையாடுவார்கள். நம்மூரில் சாமி விக்ரம் போல இட்லியில் பீர் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு பீர் மீதுள்ள தங்கள் பாசத்தை (!) காட்டுவார்கள். பீர் குடித்தால் தொப்பை ஏன் ஏற்படுகிறது என விரிவாகப் பார்போமா?


மது பிரியர்கள் மத்தியில் பீருக்கு தனி இடம் உண்டு. ரம், விஸ்கி, பிராந்தி, வோட்காபோல் உடல் வலி, வயிற்றெரிச்சல், காலை ஹேங்க் ஓவர் ஏற்படுத்தாத மதுபானம் பீர். கோடை காலத்தில் உடல் குளிர்ச்சிக்காக ’குடி’மகன்கள் பொதுவாக பீரையே தேர்வு செய்வர். போதை குறைவாக ஏறினாலும்கூட பீரில் ஆல்கஹால் அளவு குறைவு என்பதால் பலர் இதனை விரும்பி குடிப்பர். ஆனால் பீர் குடித்தால் தொப்பை உண்டாகும் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



பீர் என்றல்ல, அதிக கலோரி கொண்டுள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் தொப்பை ஏற்படுவது நிச்சயம்.



உங்கள் உடலுக்கு போதுமான கலோரியைத் தாண்டி அடுத்து நீங்கள் சாப்பிடுகிற ஒவ்வொன்றும் கொழுப்பாகவே உங்கள் உடல் எடுத்துக் கொள்ளும், முதலில் அது சேமிக்கும் இடம் வயிறு அதனால் தன தொப்பை அதிகரிக்கிறது.



பொதுவாக மது வகைகளில் பிற உணவு வகைகளை விட அளவுக்கு அதிகமான கலோரி இருக்கும். தொடர்ந்து அதை குடிப்பதனால் உங்களது உணவுப்பழக்கம் முதலில் மாறும், அதனால் உடல் இயக்கத்திற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காது.



கிடைத்ததையெல்லாம் எடுத்து சாப்பிட ஆரம்பிப்பீர்கள், தேவையான நியூட்ரிசியன்கள் இல்லாது கொழுப்பு மட்டுமே இருப்பதால் எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்.



அதை சரி செய்கிறேன் என்று சொல்லி நீங்கள் கூடுதலாக எடுக்கும் ஒவ்வொரு உணவும், தொப்பைக்கு தான் வழி வகை செய்யும்.



பெண்களுக்கு உடலின் பிற பாகங்களில் கொழுப்பை சேமிக்கும் அதே நேரத்தில் ஆண்களுக்கு வயிற்று பகுதி தான் முதன்மையான இடமாக இருக்கிறது. தொடர்ந்து பீர் குடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு உடல் தசை ஊதி, பிட்டங்கள் பெரிதாகும். இது சிலருக்கு அன்றாட வாழ்க்கையில் சங்கடம் ஏற்படுத்தும்.



பீர் குடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தொப்பை எட்டிப் பார்க்கிறது. அதோடு வயது ஏற ஏற ஜீரண சக்தி குறைந்திடும். தொடர்ந்து ஒரேயிடத்தில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும்போது தொப்பை அதிகரிக்க காரணி ஆகிறது.



பீர் குடிப்பதை நிறுத்தி விட்டால் தொப்பை மறைந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி, நடைபயிற்சி மூலமாகவே பீரால் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியும். ஆனால் உண்மையில் பீர் குடித்து உண்டாகும் தொப்பையினாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.



அது எந்த வகையால் உருவான தொப்பை என்பது இங்கே பிரச்சனை என்பதைத் தாண்டி, தொப்பை என்பதே உடல் நலனுக்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொப்பை அதிகமாக அல்லது பெரிதாக இருப்பவர்களுக்கு, அவர்களின் இடுப்பின் சுற்றளவு பெரிதாகும்.



இவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது, ரத்த அழுத்தம் தாறுமாறாக இருக்கும், இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும்.



திடீர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே பீர் மட்டுமல்லாமல் மதுப்பழக்கத்தையே குறைத்துக்கொள்வது நல்லது.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :