Facebook

Menu

Thursday, October 17, 2019

studentsquestionpaper.in

Do you know மாத்திரை அட்டைகளில் Empty Space எதற்கு

மாத்திரை அட்டைகளில் Empty Space எதற்கு என்று தெரியுமா?

இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது.
அதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள்.
நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு. சில சமயங்களில் அவை நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.
ஆனால், பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய கால கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பொதுவாக சில மருந்து வாங்கும் போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவில் இருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும்.
இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன.
  • சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.
  • இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வேதியல் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடைக்கப்படுகின்றன.
  • எல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலப்பொருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விபரங்கள் கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
  • அதற்கான இடம் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் வைக்கப்படுகின்றன.
  • சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் புதியதாக தயாரித்த மருந்துகளை மருத்துவர்களிடம் கொடுத்து பயன்படுத்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இலவசமாக தான் தரப்படும்.
  • இந்த மாதிரி மருந்து அட்டைகளில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. குறைவாக தான் இருக்கும்.
  • வேதியல் மாற்றங்கள், பேக்கிங் குறித்த சில காரணங்கள், இலவசமாக தரப்படும் சில மாதிரி மாத்திரை என பல காரணங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் தரப்படுகின்றன.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :