Facebook

Menu

Friday, August 3, 2018

studentsquestionpaper.in

முதல் டெஸ்ட் போட்டி: 180 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி

முதல் டெஸ்ட் போட்டி: 180 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி

இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1-ந் தேதி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க தடுமாறியது. கேப்டன் விராட் கோலியை (149 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 274 ரன்களை சேர்த்தது.





13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜென்னிங்ஸ் அஸ்வின் சுழலில் கேட்ச் ஆகி 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஜோய் ரூட்டும் அதே போல் அஸ்வின் சுழலில் ராகுலிடம் கேட்ச் ஆகி வெளியேற சொந்த மண்ணில் ரன்களை சேர்க்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இதனிடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விஸ்வரூபம் எடுக்க இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். மதிய உணவு இடைவேளையின் போது வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி, இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இதனிடையே மதிய உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பட்லரும் இஷாந்த சர்மா பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து தத்தளித்த இங்கிலாந்து அணியை சாம் குர்ரான் காப்பாற்றினார். அவர் ஒருவர் மட்டுமே இந்திய அணியின் அசுர பந்துவீச்சிற்கு தாக்கு பிடித்து அரைசதம் அடித்தார். மேலும் சாம் குர்ரானுக்கு பக்க பலமாக ரஷித் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் களத்தில் சிறிது நேரம் விளையாடினர். இந்நிலையில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருக்கையில் சாம் குர்ரான் 63 ரன்களில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அஸ்வின் 3 விக்கெட்டுகள் மற்றும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் 13 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 180 ரன்களில் சுருண்டதால், இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :