பிக்பாஸ் 3: முதல் நாள் மலர்ந்த காதல்
Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips, Cinema News and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.
இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
போட்டியாளர்கள் முதல் நாள் வீட்டுக்குள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய முதல் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. அதில் குக்கிங், வாஷிங், கிளீனிங் டீம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவியானார்.
அதைத்தொடர்ந்து ஒருவரை கோவப்படுத்துவது போல் கேள்விகள் கேட்க வேண்டும் என்றும், அதற்கு கோவப்படாமல் பதிலளிக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார். அனைவரும் அதை செய்துமுடித்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினர். தண்ணீர், கேஸ் ஆகியவற்றிற்கு மீட்டர் பொருத்தப்பட்டு அளவாக உபயோகிக்க வேண்டும் என்று சொன்ன விவகாரத்தில், சேரன், பாத்திமாபாபு இடையே இருவேறு கருத்துகள் நிலவினாலும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர்.
இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் நேர்கொண்ட பார்வை பட நாயகிகளில் ஒருவரான அபிராமி, ஷெரின் இடையேயான உரையாடல் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை உண்டாக்கியது.
கார்டன் ஏரியாவில் ஷெரினுடன் தனியாக அமர்ந்து பேசிகொண்டிருந்த அபிராமி, கவின் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அபிராமி, எனக்கு ஆரம்பத்தில் சீரியல் எல்லாம் பார்க்கப் பிடிக்காது. ஆனால் சரவணன் மீனாட்சி வரும் போது அம்மாவிடம் தமிழ் நல்லா நடிக்கிறா என்பேன். அந்த சீரியலில் கவின் பெயர் தமிழ். பின்னர் அவருடைய பெயரிலிருந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து நண்பராவதற்கான அழைப்பு வந்தது. அப்புறம் தான் அது போலி கணக்கு என்பது தெரிய வந்தது.

பின்னர் கவினுடன் ஃபேஸ்புக்கில் நண்பரானேன். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அவருக்கு நான் தான் முதலில் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். பந்தா இல்லாத நல்லபையன்” என ஷெரினிடம் கவினைப் பற்றிய அன்பை பகிர்ந்து கொண்டிருந்த போது அவர்களுடன் சாக்ஷி அகர்வாலும் சேர்ந்து கொண்டார்.
அபிராமியிடம் யார் அந்த நபர் என்று சாக்ஷி கேட்க, கவின் தான் என்று கூறினார் அபிராமி. நன்கு முடிவு செய்துவிட்டு உன்னுடைய காதலைச் சொல் என்று சாக்ஷி யோசனை கூறினார். அதை ஏற்றுக் கொண்ட அபிராமி, கவின் மனதில் காதல் இருப்பதை தெரிந்து கொண்டால் வச்சு செய்யலாம் என்று ஷெரின் மற்றும் சாக்ஷியிடம் கூறுகிறார்.
அபிராமி வைத்திருக்கும் க்ரஷ் நாளடைவில் காதலாக மாறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்று கூறி குட் பை சொன்னார் பிக்பாஸ்.